அருள்வாக்கு இன்று

மே 3-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 14:6-14

இன்றைய புனிதர்

திருத்தூதர்கள் பிலிப்பு-யாக்கோபு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. யோவான் 14:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் சீடர்களின் கேள்விக்கு இங்கு தகுந்த பதிலை முன் வைக்கின்றார். நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை என் செயல்களின் பொருட்டாவது நீங்கள் நம்பியிருக்க வேண்டுமே! இதை தவிர்த்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். என்னை காண்பவர் என் தந்தையை காண்கின்றீர்கள். தந்தை - மகன் தூய ஆவியார் மூவொரு கடவுள் என்பதனை உணர்ந்திட உமக்கு ஞானம் நிறைந்த பார்வை வேண்டும். மகன் இருக்குமிடத்தில் தந்தையும் ஆவியாரும் உடனிருந்து செயல்படுகிறார்கள் என்பதே ஞான பார்வையாகும். ஞானம் எனும் வரம் தூய ஆவியாரின் கொடை! இறைமகன் தந்தையின் மீட்பு திட்டத்தில் ஞானம் நிறைந்த கன்னி மீட்பின் கருவியானார். இங்கே தமத்திருத்துவம் வழிந்தோடுகின்றது என்பதை சுவைப்போம்

சுய ஆய்வு

  1. தந்தை - மகன் ஆவியாரை அறிகிறேனா?
  2. தமத்திருத்துவம் இங்கே சூழ்ந்திருப்பதை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பணிவின் ஆற்றல் என்னில் மிளிர்ந்திடும் வரம் தாரும்.. ஆமென்.

அன்பின்மடல் முகப்பு