அருள்வாக்கு இன்று

மே 2-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:54-58

இன்றைய புனிதர்

தொழிலாளர்களின் பாதுகாவலர் யோசேப்பு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகை கூடத்தில் அவர்களுக்கு கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது" எப்படி இந்த வல்லச் செயல்களைச் செய்கிறார்" மத்தேயு 13:54

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சொந்த ஊரில் அங்குள்ள தொழுகைக் கூடத்தில் போதிக்கின்றார். இதனைக் கண்ட மக்கள் அதிர்வுக்குள்ளாகிறார்கள். இவர் நம்மிடையே இருந்தவர் தானே எப்படி இந்த வல்லச் செயல்களை செய்யமுடிகிறது? என்று வியக்கின்றார்கள். ஆம் அன்பர்களே! நாம் இயேசுவுக்குள்ளும், அவர் நமக்குள்ளும் ஐயக்கியமாகும் போது இறைபிரசன்னம் நமக்குள் உதயமாகும். தூய ஆவியார் நமக்குள்ளிருந்து பல வல்லச்செயல்களை ஆற்றுவார். ஆனால் நம்மை வீடும் ஊரும் ஏற்றுக்கொள்ளாது. காரணம் அவர்கள் அறியும் ஆற்றலை பெறவில்லை. புறவுலக மாயையில் வாழ்கின்றனர். இதனை உணர வேண்டுமானால் அகத்துக்குள் இருக்கும் இறைவனை தரிசிக்க முயல்வோம்.

சுய ஆய்வு

  1. ஞானம் என்றால் என்ன?
  2. ஞானத்தை பெற எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் எனக்குள் சங்கமிக்க உமது துணையாளரை எனக்குள் பதிவு செய்யும் ஆற்றல் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு