அருள்வாக்கு இன்று

மே26 - புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:32-45

இன்றைய புனிதர்

 St philip neri

புனித பிலிப்பு நேரி

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார். மாற்கு 10:40

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர் யாக்கேயும், யோவானும் இயேசுவிடம் நீர் அரியணையில் அமரும் போது ஒருவர் வலப்புறமும் மற்றொருவர் இடப்புறமும அமரும் வரம் தாரும் என்று கேட்டனர். அதற்கு இயேசு நான் பருகும் துன்பக் கிண்ணத்தில் உம்மால் பருக முடியமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் முடியும் என்றனர். ஆனால் வலதுபுறமும் இடதுபுறமும் அமரும் பாக்கியம் தந்தை யாருக்கு அருள்கின்றாரோ அவர்களே அமர முடியும் என்ற தந்தையின் திருவுளத்தை இங்கே பதிவு செய்கின்றார். ஆம் அன்பர்களே! நாமும் இறைவார்த்தையின்படி வாழும் போது நாம் எங்கு அமரவேண்டும் என்பதை தந்தை நமக்கு வெளிப்படுத்துவார்

சுய ஆய்வு

  1. வலது-இடது என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. அரியணை என்றால் என்ன? அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வலதுபுறம்-இடபுறமும் என்னும் அரியாசனத்தை எமக்கும் அருளும் வரம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு