அருள்வாக்கு இன்று

மே24 - திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 10:17-27

இன்றைய புனிதர்

Mary Help of Christians

புனித சகாய மாதா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார். மாற்கு 10:23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தயில் இயேசு செல்வர் இறையாட்சிகுட்படுவது கடினம் என்று நல்ஆசானாக வலியுறுத்துகின்றார். காரணம் நாம் எத்தகைய பக்தி முயற்சிகளை கடைபிடித்தாலும் ஆலயங்களை நோக்கி வலம் வந்தாலும், ஏழை எளியவர் மீத மனமிரங்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட நம்மால் இயன்ற உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்யாதபோது, இறையாட்சிக்குள் நுழையமுடியாது என்பதற்கு இன்றைய நற்செய்தி நமக்கு சாட்டையடி கொடுக்கின்றது. இந்த செல்வந்தருக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் உண்டு என்று இறைமகன் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். எனவே நாம் நமக்குள்ளதை பகிர்ந்து வாழ்வோம். மறுவாழ்வில் இறையரசில் அக மகிழ்வோம். நமக்கு அடுத்தவர்களுக்கு இறைமகனின் கூற்றை அறிவிப்போம்.

சுய ஆய்வு

  1. செல்வந்தரின் மனம் கொண்டுள்ளேனா?
  2. பகிர்ந்து வாழும் மனம் கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னிடம் இருப்பதை வறியோரிடம் பகிர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு