அருள்வாக்கு இன்று

மே21 -வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான். 21:15-19

இன்றைய புனிதர்

St.Christopher Magallanes

புனித கிறிஸ்டோபர் மகல்லானெஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யோவானின் மகன் சீமோனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்டார். ஆம் ஆண்டவரே எனக்கு உம்மீது அன்பு உண்டு என்று தெரியுமே என்றார். இயேசு என் ஆடுகளை மேய் என்றார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சீமோனிடம் தன் காத்து வந்த மக்களை விட்டு பிரிய போகின்றோம். பேதுரு இவர்களை காப்பாரா என்பதை அறிந்துக் கொள்ள அவரது விசுவாசத்தை மும்முறை சோதித்து பார்க்கின்றார். ஏனென்றால் இயேசு பிடிபடும் போது மும்முறை மறுதலித்தார் ஆயிற்றே. எனவே தான் அவரது நம்பிக்கையை அறிந்துக் கொள்ள முயற்சிக்கின்றார். தான் பரலோகம் சென்று விட்டாலும் தன் மக்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொண்டு பேதுருவை சோதிக்கின்றார். ஆம் மக்களே, சோதனை மிகுந்த இந்த உலகில் நாம் கடந்து செல்வது என்பது கடினம். எனவே தான் இவ்வாறு சோதிக்கின்றார்.

சுய ஆய்வு

  1. நான் என் வாழ்க்கையில் நாளுக்கொரு வேடம் போடுகின்றேனா?
  2. உண்மை கடவுளை இனம் காண்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நானும் என்னால் முடிந்த அளவு உமது திருவுளத்தை நிறைவேற்றும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு