அருள்வாக்கு இன்று

மே 14-வெள்ளி

இன்றைய நற்செய்தி
புனித மத்தியா-திருத்தூதர்

இன்றைய புனிதர்

 St. Matthias

புனித மத்தியாஸ்-திருத்தூதர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும் என்பதே என் கட்டளை.யோவான். 15:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு என் தந்தை உங்கள் மீது கொண்ட பேரன்பால் என் வழியாகத் தனது மக்களைக் காத்து வருகின்றார். அதேபோல் நான் உங்களுக்குயிடும் அன்பு கட்டளை மற்றவரை அன்பு செய்யுங்கள். அதாவது பிரதிபலன் பாராது அன்பு செய்யுங்கள். நலிந்தோருக்கும் அடிமைகளுக்கும் அன்பு செய்யுங்கள். அவர்கள் நலமுடன் வாழ உம்மால் முடிந்தவற்றைச் செய்யுங்கள். இதுவே நான் தரும் அன்பு கட்டளையாகும் என்கின்றார். எனவே நாமும் அவரது அன்பில் நிலைத்திருக்க அன்பால் இந்தச் சமுதாயத்தைக் கட்;டி எழுப்புவோம். அன்பியம் என்பது இதன் அடிப்படையில் உருவானதே. இதனை நாம் மேற்கொள்வோம். அன்பு மக்களாய் வாழ்வோம்.

சுய ஆய்வு

  1. அன்பு ஒன்றே சிறந்தது என்பதை உணர்கின்றேனா?
  2. எனது அன்பு எத்தகையது என்பதை உரசிப் பார்க்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அன்பின் நான் என்றும் நிலைத்திருக்க நான் அயலானை அன்புச் செய்வதே மேல் என்பதை உணரும் வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு