அருள்வாக்கு இன்று

மே 11-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான். 16:5-11

இன்றைய புனிதர்

-St Ignatius of Laconi

லக்னோனி புனிதர் இன்னேசியஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என எடுத்து காட்டுவார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பாவம், நீதி, தீர்ப்பு இவற்றைப் பற்றி மக்கள் அன்றும் இன்றும் கொண்டுள்ள தவறான கொள்கைகளைத் தூய ஆவியார் வந்து ஒவ்வொருவருக்கும் உணர்த்துவார். ஏனெனில் துணையாளராகிய ஆவியார் என்றும் சதா இயங்குவர். அவரது ஆற்றல் எங்கும் ஊடுருவிச் செல்லக் கூடியது. சதா இயங்குவார். நம்மைப் பராமரிப்பவரும் அவரே. எப்படியெனில் மூவொரு இறைவனாகிய இறைவன் பணிகளைக் கவனிப்போம். தந்தை - படைத்தவர். சுதன் - மீட்டவர். தூய ஆவி - பராமரிப்பவர். எனவே தான் மீட்ட மக்களை அழிவின்றி பராமரிக்கத் துணையாளரை அனுப்புகின்றார். அவரது ஆற்றலை உணர வேண்டுமானால் தீய ஆவியின் பிடியிலிருந்து விலகி நிற்கும் தூயவரின் ஆற்றல் நம்மில் மிளிர வேண்டும்.

சுய ஆய்வு

  1. துணையாளரை நான் உணர எனது முயற்சி யாது?
  2. அவரை எப்படிப் பெறுவேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது துணையாளரை எனக்குள் பதிவு செய்து என்னை என்றும் உமது பணியாற்றும் வல்லமை தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு