அருள்வாக்கு இன்று

மே 9- ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான். 15:9-17

இன்றைய புனிதர்

 -St Pachomius

புனித பச்சோமியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அவரது இரண்டு கட்டளைகளைக் கடைபிடித்து வாழும்போது அவரது அன்பில் நாம் நிலைத்திருப்போம் என்பதை உறுதி செய்கின்றார். மீண்டும் மீண்டும் நமக்குள் பதிவு செய்கின்றார். இந்த வசனத்தை நாம் அடிக்கடி வாசிக்கின்றோம். இதன்படி வாழ நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை அலசிப் பார்ப்போம். அவரது அன்புச் சீடர்களாக வாழவே நமக்குத் திருமுழுக்கின் வழியாக நம்மை இணைத்துக் கொண்டார். இந்த உறவு நாம் தடுமாறிப் பாவச் சூழலில் விழும்போது தடைப்படுகின்றது என்பதை உணர்ந்து அவரது இணையில்லாப் பேரின்பத்தில் நிலைத்திருக்க முயல்வோம்.

சுய ஆய்வு

  1. நான் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றேனா?
  2. அவற்றைச் சிந்தித்துச் செயல்வடிவம் தருகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் உமது அன்பில் இணைந்து உம் மறையுடலில் இணைந்திருக்க வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு