அருள்வாக்கு இன்று

மே 7 -வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான். 15:12-17

இன்றைய புனிதர்

 St. John of Beverly

பெவெர்லி நகர் புனித ஜான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தம் நண்பர்களுக்காக உயிரை கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தன் அன்பைப்பற்றி இயேசு புடமிட்டு காண்பிக்கின்றார். தான் தன் நண்பர்களுக்காக பாடுகள் பலப்பட்டு சிலுவை சுமந்து மரித்து மீண்டும் உயிர்த்தார். இதை விட சிறந்த அன்பு வேரெதுவும் இல்லை. எனவே நாமும் அடுத்தவருக்காக தன்னையே இழப்பது நலம் என்கின்றார். எப்படியெனில் சிலர் தன்னை தானே உயர்ந்தவன் என்றும் என்னை போன்று வேறு எவரும் இந்த வையகத்தில் இல்லை என்று இறுமார்ப்புடன் இருப்பர். தம்மால் மட்டுமே அனைத்தும் இயலும் என்று தலைகனம் பிடித்து இருப்பர். அப்படி பட்டவர் தன் நிலையை தளர்த்தி பிறருக்காக தன்னையே இழந்து கீழே இறங்கி வந்து தாழ்ந்த தன் நண்பனை கரை சேர்ப்பானாகில் இதுவே மேலானது. அடுத்தவருக்காக தன்மானத்தையே விட்டு வாழும் போது உயர்வடைகின்றான்.

சுய ஆய்வு

  1. அன்பின் மகத்துவத்தை உணர்ந்துள்ளேனா?
  2. உணர்ந்ததை எவ்வாறு செயலாற்ற விழைகின்றேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் என்றும் உமது அன்பு பிள்ளையாக வாழ வரம் தாரும். .ஆமென்.

அன்பின்மடல் முகப்பு