அருள்வாக்கு இன்று

மே 3-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 14:6-14

இன்றைய புனிதர்

-St Philip and James

புனித பிலிப்பு, யோக்கோபு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. யோவான் 14:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தையிடம் செல்வதைத் தம் சீடர்களிடம் சொல்கின்றார். இதன் கருப்பொருளை அறியும் பொருட்டு, பிலிப்பு, 'தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்றபோது, “தந்தை என்னுள்ளும் - நான் அவருள்ளும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியாமலிருக்கின்றீர்கள். தந்தை - மகன் - தூய ஆவியார் செயல்களை ஏன் இன்னும் உய்த்துணர முடியாது இருக்கின்றீர்கள்? படைப்பாளராக தந்தையும், மீட்பராக மகனும், பராமரிப்பவராக தூய ஆவியாரும் ஒன்று." ஒரே கடவுளாகச் செயலாற்றுவது மானிடருக்காகவேதான் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். சீடர்கள் அன்று கேட்ட கேள்விகள், இன்றைய மானிடர் அதனை அறிந்து கொள்ளத்தான் என்பதை மனதில் பதிவு செய்வோம். வழியும், உண்மையும், வாழ்வுமான இறைமகன், நம்மை இறைமையில் வாழ அழைப்பு விடுக்கின்றார்,

சுய ஆய்வு

  1. வழியும் உண்மையும் வாழ்வுமான இறைமகனை அறிகிறேனா?
  2. உண்மையை நோக்கிப் பயணிக்க என் முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது வழியாக நான் பயணிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு