அருள்வாக்கு இன்று

மார்ச் 31-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 10:31-42

இன்றைய புனிதர்


தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தையை படித்துத் தியானித்து சிந்தனைக்குட்படுத்தி மீண்டும் தமக்கும் மற்றவருக்கு வாழ்வாக்கி காட்டுவதே, உண்மையான இறைவனின் திட்டத்தில் முழு பங்கேற்பாளி என்பதை முழுமையாக உணர்த்துகிறார். இவ்வாறு நாம் வார்த்தையோடு சங்கமிக்கும்போது இறைவனோடு ஐக்கியம் ஆவோம் என்பது திண்ணம். எனவே நாம் ஒவ்வொரு இறைவன் நமக்கு விட்டுச் சென்ற உண்மைச் சொத்தாகிய இறைவார்த்தையை பெற்றுக் கொள்வோம். நாமும் புனிதர்களாய் மாறுவோம். இதுவே இறைமகனின் விருப்பமும் கூட. எனவே நாம் நமது வாழ்வை இறைவனின் கரங்களில் ஒப்படைப்போம். மீட்பு பெறுவோம் வாரீர்.

சுயஆய்வு

  1. நான் இறைவார்த்தையைப் பெற முயற்சிக்கிறேனா?
  2. அதன் படி என் வாழ்வு அமைந்துள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் எனது வாழ்வாக இறைஞ்சுகின்றேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு