அருள்வாக்கு இன்று

மார்ச் 30-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 8:51-59

இன்றைய புனிதர்


புனித ஜான் க்ளிமாக்ஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்“ என்றார். யோவான் 8:58

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தான் மூவொரு இறைவன் என்பதை அன்றைய யூத மக்களிடம் வெளிப்படுத்துகின்றார். எப்படி எனில் ஆபிராகாமை தான் தங்கள் முன்னோர் என்று நினைத்து வந்த அந்த மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கின்றார். ஆபிரகாம் முன்பே நான் இருக்கின்றேன். அதாவது மூவொரு இறைவனாகச் செயல்படுகின்றோம் என்பதை விளக்குகின்றார். எனவே உண்மை இறைவனை அறியாத அன்றைய மக்களைப் போல் நாம் இராமல் இன்று இயேசுவிற்கு சாட்சிகளாய் நாம் மாறுவோம் வாழ்வோம். இறை வார்த்தையைப் படித்துச் சிந்தித்து தியானித்து வாழ்வில் செயல் வடிவம் கொடுப்போம்.

சுயஆய்வு

  1. நான் உண்மை இறைமகனை அறிந்துள்ளேனா?
  2. அவரில் இணைய விரும்புகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மூவொரு இறைவனாகவும் இறைதன்மையில் மூவரும் சமம் என்பதை என்னில் பதித்தருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு