அருள்வாக்கு இன்று

மார்ச் 29-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 8: 31-42

இன்றைய புனிதர்


அரிமத்தியாவின் புனித யோசேப்பு

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்கு இயேசு,“பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமையென உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” என்றார். யோவான் 8:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பாவம் செய்பவர்களைப் பற்றி என்று சூளுரைக்கின்றார். எப்படி எனில் பாவம் ஒருவர் மனம் பொருந்தி நீதி நேர்மையற்ற செயல்களில் மற்றவர்களுக்கோ அல்லது அடுத்தவரின் சொத்திற்கோ ஆசைபட்டு தகாத வழியில் செயல்படும்போது உண்மையாகவே அவர் பாவம் செய்கின்றார். அன்றைய சூழலில் நடந்தவையும் இவை தான். எனவே தான் இயேசு மக்களைப் பாவத்திலிருந்து மீட்டெடுக்கவே வந்தார் என்பதும் உண்மை. எனவே இறை மக்களாகிய நாம் இவ்வுலக நாட்டங்களினால் நாம் நம்மையே இழந்து பாவிகளாகும் நிலையிலிருந்து விடுபட்டு இறைவனது மக்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கினைறார்.

சுயஆய்வு

  1. நான் நிலை என்ன என்பதை உணர்கின்றேனா?
  2. அதற்கேற்றவாறு நான் மாறுகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இவ்வுலக ஆசைகளை மறத்து நிறைவாழ்வை நோக்கிய பயணத்திற்கு என்னை மாற்றியருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு