அருள்வாக்கு இன்று

மார்ச் 28-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 8: 21-30

இன்றைய புனிதர்


புனித மூன்றாம் சிக்டஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்“ என்றார். யோவான் 8: 29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் தந்தையின் -உடனிருப்பை வெளிப்படுத்துகின்றார். தன் தந்தையின் விருப்பத்தை நிலைநாட்டவே இந்த மண்ணுலகிற்கு இறைமகன் வந்தார். எனவே என்னை அனுப்பியவரின் கட்டளைகளை நான் கடைபிடிக்கின்றேன் என்றார். அன்பு சகோதரர்களே நாம் திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக் கொண்ட அருள் வரங்களின் மூலம் இயேசுவின் மறையுடலாகவும் அவர் செயல்பாடுகளில் நாமும் பங்கேற்க்கிறேம் என்பதை மறவாமல் இறைமகனது உடனிருப்பை நம் வாழ்வில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

சுயஆய்வு

  1. நான் இறைமகனின் மறையுடல் என்பதை உணர்கின்றேனா?
  2. எனக்கு அடுத்திருப்பவரும் என் உடன் பிறப்புகள் என்பதை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உம்மிலும் நீர் எம்மிலும் நிலை பெற்று வாழ வரமருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு