அருள்வாக்கு இன்று
மார்ச் 27-திங்கள்
இன்றைய நற்செய்தி
யோவான் 8:12-20
இன்றைய புனிதர்

புனித ரூபர்ட்
யோவான் 8:12-20
புனித ரூபர்ட்
என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்" என்றார். யோவான் 8:18
இன்றைய நற்செய்தியில் இயேசு, ”நானே உலகின் ஒளி! என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்.” என்று ஒளியாகச் சான்று பகர்கின்றார். இதனைக்கேட்ட பரிசேயர் உம்மைப் பற்றி நீரே சான்று பகர்கிறீர் என்று கேட்டதும் அவரைப் பற்றிச் சான்று பகரத் தந்தை இருக்கிறார். எனெனில் பிளவு பட்ட மனித சமுதாயத்தைத் தீயோனிடமிருந்து மீட்டு எடுக்கத் தன் மகனைக் கன்னி மரியின் வாயிலாக இவ்வுலகிற்கு அனுப்பினார். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. இவரது இறைஇரக்கச் செயல்கள் அன்றும் இன்றும் தவறான பாதையில் பயணிப்போரை நம்பும்படி இல்லை. எனவே தான் இறைமகன் தந்தையின் திருவுளபடி இறைத்திட்டத்தை நிறைவு செய்வார். ஏனெனில் எங்கிருந்து வந்தாரே அதே இடத்திற்கு மீண்டும் மாட்சிமையோடும் தந்தையால் எடுத்துக் கொள்ளப்படுவார் என்பதே உண்மை!
அன்பு இயேசுவே! உமது சான்றுபடி நாங்களும் வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்