அருள்வாக்கு இன்று
மார்ச் 26-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
யோவான் 11:1-45
இன்றைய புனிதர்

புனித லுட்ஜர்
யோவான் 11:1-45
புனித லுட்ஜர்
அவர் இதைக் கேட்டு, “ இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ” என்றார். யோவான் 11:4
இன்றைய நற்செய்தியில் இயேசு, நோயுற்றிருந்த லாசரின் நோய் ஒரு முன் உதாரணமாக அமைவதை சுட்டி காட்டுகிறார். எப்படி எனில் இறைமகன் இம்மண்ணுலகிலிருந்து தன் மகனுடன் தந்தையின் உடனிருப்பை லாசர் மூலம் மானிடர் அறியும் பொருட்டு லாசரின் மகனும் உயிர்ப்பும் அமைந்தது. லாசர் இறந்து மூன்று நாள் ஆகியும் எந்த வித சலசலப்பும் இல்லாமல் இயேசு நிதானமாகச் செயல்படுகிறார் என்பதை உணருவோம். ஆம் சகோதரர்களே! நாம் இயேசுவின் மாட்சிமையை அன்றுள்ள மக்களுக்கு உணர்த்தியுள்ளது போல் இன்றும் நம் தந்தை நமக்கு உணர்த்துகின்றார். இதன் அடிப்படையில் கிறிஸ்துவில் மாட்சியில் நாம் பங்கு பெறுவோம்.
அன்பு இயேசுவே! உம் மாட்சியை நாங்கள் என்றும் உணரும் வரம் தாரும் ஆமென்.