அருள்வாக்கு இன்று

மார்ச் 24-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 7: 1-2,10, 25-30

இன்றைய புனிதர்


ஸ்வீடன் நாட்டு புனித கத்தரீன்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே ; என்றார். யோவான் 7 :29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் தந்தையை வெளிப்படுத்துகிறார். எப்படி எனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் அவரைக் கொல்ல தேடி வருகின்றார்கள். ஆனால் இயேசுவின் நேரம் இன்னும் வராத நிலையில் அவர்கள் விலகிச் செல்கின்றார்கள். ஏன் இந்த நிலை சற்று சிந்திப்போம். இயேசு என்ன குற்றம் செய்தார். அவர் வந்ததே வறியோருக்கு வாழ்வளிக்கவே! ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத ய10த இனம் தங்கள் பதவியை, தங்கள் சொத்தைப் பாதுகாத்து கொள்வதிலேயே கண்ணாயிருந்தார்கள். அடுத்தாரை ஏமாற்றி மோசடி செய்தும் இவர்கள் உயர்ந்தார்கள். இவற்றையெல்லாம் மாற்றி அமைத்த இயேசுவையே அவர்கள் மனமில்லாதவர்களாய் கொலை குற்றத்திற்கு அர்ப்பணித்தார்கள். நம் நிலை என்ன?

சுயஆய்வு

  1. இயேசு நமக்காய்ப் பாடுபட்டார் என்பதை உணர்கின்றேனா?
  2. என்னில் அவரது சாயலை காக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உன் வரவை ஏற்காத அன்றைய யூத இனம்போல் நாங்கள் இராமல் எம்மைப் பாதுகாத்தருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு