அருள்வாக்கு இன்று

மார்ச் 21-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 5-1-3,5-16

இன்றைய புனிதர்


புனித நிக்கோலஸ் டி ஃப்ளு S

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்: இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்” என்றார். யோவான் 5-14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் முப்பத்தெட்டு ஆண்டுகள் நலமற்று இருந்தவனைக் குணப்படுத்தினார். அவனைக் கோவிலில் கண்டு கூறுகின்றார் இனி பாவம் செய்யாதே என்று. எனவே பாவம் செய்வதும் நமது உடலைப் பாதிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது இந்த நற்செய்தி. எனவே பாவம் என்பது மற்றவருக்குச் செய்யும் கெடுதி - நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தீவினையுமாகும். எனவே நாம் எப்போதும் விழிப்போடு இருக்க நமக்கு இயேசு எச்சரிக்கை விடுக்கின்றார். நாம் வாழ்கின்ற தடங்களில் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாமல் அடுத்தவரையும் சமம் என்ற உயரிய கொள்கையோடு வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா?

சுயஆய்வு

  1. என் வாழ்வில் நான் எந்த நிலையில் இருக்கின்றேன்?
  2. எனக்கு அடுத்தவர்களை எவ்வாறு அன்பு செய்கின்றேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் தவறும் நிலை ஏற்பட்டால் என்னைத் தூக்கி எடுத்து என் மனநிலை மாற்றும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு