அருள்வாக்கு இன்று

மார்ச் 17-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு 12: 28-34

இன்றைய புனிதர்


புனித பேட்ரிக்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ;நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ; என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை. மாற்கு 12:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய இரண்டு கட்டளைகளை வெகுவாகப் புரிந்து கொண்ட மறைநூல் அறிஞருக்குப் பதில் தருகின்றார். நீர் இறையாட்சிக்கு மிக அருகில் இருக்கின்றீர் என்று உணர்த்துகின்றார். ஆம் அன்பர்களே நாமும் தவறுகள் பல செய்திருந்தாலும் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு பெற்று இறைவனை முழுமனதோடு வணங்குவோமாகில் நாமும் இறையாட்சியை நெருங்கிவிடுவோம். இரண்டாவது கொடுக்கின்ற பலிகளை விட அடுத்தவருக்கு நாம் உரிய நேரத்தில் உரிய விதத்தில் அன்போடு கொடுக்கும் உதவியே மேலானது என்று இயேசு நமக்கு அன்பு கட்டளை இடுகின்றார்.

சுயஆய்வு

  1. கடவுள் ஒருவர் தான் என்பதை ஏற்கின்றேனா?
  2. எனக்குக் கீழ் எளியவர்களிடம் அன்பு காட்டுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் எந்த வித பிரதிபலன் பாராமல் வறியாருக்கு உதவி செய்யும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு