அருள்வாக்கு இன்று

மார்ச் 16-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 11: 14-23

இன்றைய புனிதர்


புனித ஹெர்பர்ட்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்: என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.” லூக்கா 11 - 23

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உடனிருப்பை வெளிப்படுத்துகிறார். எப்படி எனில் இறைவனின் தூய ஆவியானவர் நம்முடன் இணைந்திருக்கின்றார். நாம் தவறும் போதும் உலக மாயையில் மயங்கும் போதும் அவரது பிரசன்னம் மழுங்கடிக்கப்பட்டுத் தீய ஆவியின் இருப்பிடமாகிறது. அப்பொழுது மக்கள் சிதறடிக்கப்படுகின்றனர். தீய சக்திகளுக்கும் அடிமையாகின்றனர். நற்செயல்களைச் செய்ய இயலாது. எனவே தூய ஆவியானவரின் உடனிருப்பைத் தக்க விதத்தில் நாம் வைத்துக் கொள்வதால் இறை பிரசன்னம் நம்மில் நிலைத்திருக்கும். எவ்வித தீங்கும் நம்மை நெருங்காது. இயேசுவும் நம்முடன் இருந்து இறைப் பணியாற்ற அருள்வார்.

சுயஆய்வு

  1. நான் முழுமையாகத் தூய ஆவியாரின் ஆலயமாக வைத்துள்ளேனா?
  2. அல்லது அதற்கான முயற்சியை மேற்கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் எம்முடன் இருந்து எமை ஆளும் வரம் தருமாறு வேண்டுகிறோம் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு