அருள்வாக்கு இன்று

மார்ச் 14-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத் 18:21-35

இன்றைய புனிதர்


புனித மெடில்டா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். மத் 18:33

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நம் குற்றங்களை மன்னிப்பது போலப் பிறர் குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்று மன்னிக்கும் அதிகாரத்தை நமக்கு உவமைமூலம் விளக்குகின்றார். இன்றைய சூழலில் குற்றங்கள் பெருகி வருகின்ற நிலையில் தவறு செய்பவன் தன் தவறை உணர்ந்து மனம் மாறி மன்னிப்பு கேட்டும்போது கண்டிப்பாக மன்னிக்க வேண்டும். நம் பாவங்களை நம் இறைமகன் வருந்தித் திருந்தும்போது மன்னிப்பது போல் நாமும் பிறரை மன்னிப்பது என்பதாகும். எனவே நமக்கு அடுத்தவரை மன்னிக்கும் மனநிலை கொண்டு வாழ அழைக்கின்றார்.

சுயஆய்வு

  1. நான் மற்றவர் குற்றத்தை மன்னிக்கின்றேனா?
  2. என் குற்றத்தை உணர்ந்து வருந்துகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் எமது பாவங்களை மன்னிப்பது போலப் பிறர் குற்றங்களை மன்னிக்கும் மனதினை தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு