அருள்வாக்கு இன்று

மார்ச் 12-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


புனித செராபினா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. யோவான் 4:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே என் உணவு என்று கூறுகிறார். எப்படி எனில் அன்றைய சூழலில் சமாரியர் தாழ்த்தப்பட்டவர் அவர்களோடு பேசினாலும் தீட்டு அவர்களைப் புறந்தள்ளி வைத்திருந்தனர். இயேசுவின் வருகையோ இப்படிப்பட்டவரை இனங்கண்டு அவர்களோடு உறவு கொண்டு இறைவனில் படைப்பில் ஜாதிகள் இல்லை என்பதை வலியுறுத்தவே இந்த உரையாடல். எனவே தன் தந்தையைப் பொறுத்தமட்டில் ஆண் - பெண் இரண்டு மட்டுமே ஏற்றத் தாழ்வுகளோ - சாதிகளோ கிடையாது என்பதை அன்று யூதர்களிடையே உணர்த்துகின்றார். அதே நிலையைத் தான் நம் நாட்டிலும் அன்று பிரிந்து வந்த ஆரியன் சாதிகளைத் தன் பிழைப்புக்காகக் கடவுளின் பெயரால் பிரித்து ஊன்றி விட்டான். இன்று அது பலுகி பெருகி நாட்டையே அழித்துக் கொண்டிருக்கின்றது.

சுயஆய்வு

  1. நான் சாதி என்னும் விஷத்தை என்னுள் கொண்டுள்ளேனா?
  2. கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! சாதிகளைக் கடந்து பணியாற்றும் நல் மனதினை தாரும் ஆமென்

அன்பின்மடல் முகப்பு