அருள்வாக்கு இன்று

மார்ச் 10-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 21:33-43,45-46

இன்றைய புனிதர்


டோமினிக் சாவியோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்: அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மத். 21:43

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தீயவர்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படும். ஏனென்றால் தாங்கள் விரும்பியவாறு சுயநல நோக்கோடு செயல்படுவார்கள். அதனால் மக்களினம் அழிவு பாதைக்குச் செல்ல நேரிடும். எனவே இறையாட்சி விமுமியங்களின் படி வாழ்பவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இறைமகன் கூறுகின்றார். ஆம் சகோதர சகோதரிகளே இன்று சுயநலவாதிகள் மக்கள் சொத்தை அபகரித்துப் பொதுநலம் பேணாது ஆட்சி செய்வதை நாம் காண்கின்றோம். எனவே நாமும் பொதுநலவாதிகளாக மாறுவோம். இறையாட்சி நம்மில் மலரட்டும்.

சுயஆய்வு

  1. நான் எப்படிபட்ட மனநிலையில் உள்ளேன்?
  2. சுயநலவாதியா அல்லது பொதுநலவாதியா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! அடுத்தவருக்குத் தொண்டுபுரிந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு