அருள்வாக்கு இன்று
மார்ச் 8-புதன்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 20:17-28
இன்றைய புனிதர்

இறைவனின் புனித யோவான்
மத்தேயு 20:17-28
இறைவனின் புனித யோவான்
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். மத்தேயு 20:26
இன்றைய நற்செய்தியில் இறைமகனை பின்பற்றி இறைப்பணியாற்ற விரும்புகிறவர்கள் இவ்வுலகில் எவ்வாறு பணி ஆற்ற வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். சமுதாயத்தில் பெரியவராக வாழ விரும்புபவர்கள் ஏழை எளிய அடித்தட்டு மக்கள்வரை ஊடுருவிச் சென்று அவர்களது சுக துக்கங்களில் தன்னையே இணைத்துக் கொண்டும் அவர்களுக்குத் தொண்டு புரிபவர்களாகவும் வாழ அழைக்கின்றார். இன்றைய சூழலில் தொண்டாற்ற அனேக வாய்ப்புகள் இவ்வுலகில் குறிப்பாக வறியோர் மத்தேயு நற்செய்தியில் மலிந்து கிடக்கின்றது. அவர்களின் வேதனைகளை இனம் கண்டு தொண்டாற்ற, திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் அழைக்கப்பெற்றுள்ளோம் என்பதை உணருவோம்.
அன்பு இயேசுவே! நான் சமுதாயத்தில் நலிவுற்றோருக்கு பணி செய்ய எனக்கு வரம் தாரும் ஆமென்.