அருள்வாக்கு இன்று

மார்ச் 4-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:43-48

இன்றைய புனிதர்


புனித கசிமீர்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.மத்தேயு 5:44

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு "பகைவருக்காகச் செபியுங்கள். பகைவரிடமும் அன்பு செய்யுங்கள்" என்று அன்பு கட்டளையிடுகிறார். அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்தால் சமமாகக் கருதப்படும். ஆனால் பகைவருக்கு அன்பு செய்தால், பகை அழிந்து அங்குச் சமரசம் ஏற்படும். அவர்களுக்காக இறைவனிடம் செபிக்கும்போது அவர்கள் மாற்றம் காண்பார்கள். இதையே இயேசு விரும்புகின்றார். எனவே நம்மைத் துன்புறுத்துவோருக்காகவும், வெறுப்போருக்காகவும் செபிப்போம் அனைவரும் இறைவனில் ஒன்றே என்பதை வாழ்வாக்குவோம்.

சுயஆய்வு

  1. என் பகைவரை நண்பனாக ஏற்றுக் கொள்கிறேனா?
  2. என் வாழ்வில் மாற்றம் காண்பேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னில் ஏற்றத் தாழ்வில்லா மனதினை தந்து அனைவரையும் அன்பு செய்யும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு