அருள்வாக்கு இன்று

மார்ச் 3-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5: 20-26

இன்றைய புனிதர்


புனித கத்தரின் ட்ரெக்ஸ்செல்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். மத்தேயு 5: 26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு "ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளாக எண்ணுங்கள்" என்கிறார். எப்படி எனில் தந்தையின் படைப்பில் அனைவரும் ஒரு தாய் மக்கள். எனவே வஞ்சகம் - பகைமை நீக்கி நட்புடன் உறவாட வலியுறுத்துகின்றார். நாம் எதைச் செய்கின்றோமோ அதையே பலனாக நாம் பெறுவோம். எனவே அடுத்தவருக்கு எவ்வித தீங்கும் செய்யாதீர்கள். அப்படி அடுத்தவரை இவ்வுலகில் வஞ்சிப்போமாகில் விண்ணரசில் நாம் நுழைய முடியாது. மீண்டும் அத்தகையோரின் காணிக்கையும் ஏற்க மாட்டார். நாம் செய்கின்ற தீயச் செயல்களின் பலன் கடைசி மூச்சு வரை விடாது. பின் தொடரும் என்கிறார். நாம் இறைவனின் அன்பு கட்டளைகளின் படி வாழ்வோம்.

சுயஆய்வு

  1. அடுத்தவரிடையே ஏற்றத் தாழ்வை காண்கின்றேனா?
  2. இல்லை அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னைச் சுற்றியுள்ளவரை அன்பு செய்யும் வரம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு