advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 24, 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

"இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது". (லூக்கா 1:78, 79)

சிந்தனை

இஸ்ரயேலின் கடவுளாகிய நம் தந்தை வாக்களித்தபடியே, நம்மைப் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யவும் நமக்கு வழிகாட்டும்படியாக உன்னத கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவை மீட்பராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அவருக்கு முன்னோடியாக வந்த திருமுழுக்கு யோவான் 'அமைதி வழியில் மக்களை நடத்த விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' என்று இறைவாக்கு உரைக்கிறார்.

மன்றாட்டு

இரக்கத்தின் ஆண்டவரே, எங்கள் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற உமது கனிவான கருணைக்கு நன்றி. இருளில் இருக்கின்ற, எங்கள் இதயங்களின் இருளை அகற்றிட உமது ஒளி எம்மில் நிறையட்டும். இறைவா, அமைதியின் பாதையில் எங்களை வழிநடத்துவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.