
"ஏனெனில், அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது". (லூக்கா 1:66)
கடவுளால் இயலாத காரியம் எதுவுமில்லை என்பதை இறைப்பற்றும், நம்பிக்கையும் கொண்டிருந்த முதியோர்களாகிய சக்கரியாவும் எலிசபெத்தும், தன் மகன் யோவானின் பிறப்பின் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். நம் வாழ்விலும் இறைவன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கேற்ப வல்ல செயல்கள் செய்வார் என்பது உறுதியாகும். 'நானே ஆண்டவர். எல்லா மக்களுக்கும் கடவுள் நானே. அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ' (எரே 32:26).
ஆண்டவரே, மகிழ்ச்சியான தருணங்களிலும், சோதனைகளை எதிர்கொள்ளும் நேரங்களிலும், உமது கைவன்மையின் ஆற்றலை நாங்கள் கண்டுணரச் செய்வீராக. உமது திருவுளத்திற்கு கீழ்ப்படிகின்ற மனத்தாழ்மையையும், உமது வழிகாட்டுதலைப் புரிந்துகொள்ளும் ஞானத்தையும் எங்களுக்குத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.