advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 22, 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

“உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்". (செப்பானியா 3:17)

சிந்தனை

அன்னை மரியா ஒரு புரட்சிப்பெண். உலகமே புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிரான இறைத் திட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். தன் உறவினளுக்கு உதவி செய்யச் செல்கிறார். அங்கே எலிசபெத் அன்னை மரியை சந்தித்து இறையன்பால் நிரப்பப்பட்டு தெய்வீக வல்லமையை வெளிப்படுத்து கிறார்கள். நாமும் பிறரை சந்திக்கும்பொழுது நம்முள் மறைந்திருக்கின்ற தெய்வீக வல்லமையாகிய இயேசுவை நம் வார்த்தையில், வாழ்வில், செயலில் வெளிப்படுத்துவோம்.

மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வாழ்வில் அரும்பெரும் செயல்கள் செய்து காப்பவர் நீரே. வல்லவரும், தூயவருமான உம்மைப் போற்றுகிறோம். தலைமுறை தலைமுறையாய் எங்களைப் பரிவோடு வழிநடத்துகின்ற உமது இரக்கம் என்றும் எம்மோடு இருப்பதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.