
“ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.” (எசாயா 7:14)
இறைவன் நேர்மையாளர்களுடன் நல்லுறவும், நட்பும் கொண்டிருப்பதால் (நீமொ 3:32) தனது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற நேர்மையாளராகிய சூசையைத் தெரிந்துகொண்டார். எனினும் அவர் சந்தேகப்படக் கூடிய சூழ்நிலைக்கு உட்பட்டு கலங்கி நிற்கும்பொழுது வானதூதரைக் கொண்டு அவரின் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துகிறார். நம் வாழ்விலும் சந்தேகங்கள் வரலாம். வீண்தீர்மானம் செய்து பிரச்சனைக்கு உட்படாமல் ஆண்டவரின் உதவியை நாடி தெளிவு பெறுவோம்.
எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எங்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் தருகின்ற உம்முடைய பேரன்பிற்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம். எங்கள் வாழ்வில் சோதனைகளை எதிர்கொள்கின்ற வேளைகளில் நீரே எங்களுக்கு வலுவூட்டி வழிநடத்த வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்