advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 18, 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

" மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்." (எசாயா 54:10)

சிந்தனை

இம்மானுவேல் = கடவுள் நம்மோடு. இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து, நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற வாக்குறுதியைக் கடவுள் அன்னை மரியா வழியாக நிறைவேற்றுகிறார். இந்த மறைபொருள் யோசேப்புக்கு புரியாத புதிராக இருந்ததால் சந்தேகப்படுகிறார். வானதூதர் புரிய வைக்கிறார். நமக்கும் புரியாத புதிராக இருக்கலாம். மண்ணிலிருந்து மனிதனை உண்டாக்கிய கடவுளுக்கு மரியாவின் வயிற்றில் கருவை உருவாக்க முடியாதா… ஆண்டவரால் இயலாத காரியம் ஒன்றுமில்லை. ஆகவே எதையுமே சந்தேகத்துடன் பாராமல் அவரன்றி ஒன்றுமே நடக்காது என்ற உண்மையை உணர்ந்துகொள்வோம்.

மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள்மீது நீர் கொண்டுள்ள நிலைபெயராத பேரன்பு எங்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் அளிக்கிறது. என்றும் உமது அன்பை துய்த்துணர்ந்து வாழ எங்களுக்கு அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்