advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் , 2025 ஞாயிறு

இறைவார்த்தை:

" மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை..." (எசாயா 45:22)

சிந்தனை

இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் மனிதனாகப் பிறக்கப் பல தலைமுறைகளைத் தெரிவு செய்தார். இந்த 42 தலைமுறைகளிலும் குறைநிறைகள் காணப்படுகிறது. ஆயினும் ஆண்டவர் தான் வாக்களித்த திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால் குறைகளை மன்னித்து நிறைவாக்கி தம் திட்டத்தை நிறைவு செய்தார். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் வைத்து இவ்வுலகில் நம்மைப் பிறக்க வைத்துள்ளார். திட்டமிடுபவரும் அதை நிறைவுசெய்பவரும் ஆண்டவரே என்பதால் செபத்தில் நம் திட்டத்தை ஆய்ந்தறிந்து செயல்பட அருள்புரிவார்.

மன்றாட்டு

ஆண்டவரே, உம்மிடம் நாங்கள் திரும்பி வரவும், உம்மை விட்டு விலகாதிருக்கவும் எங்களுக்கு உதவி செய்தருளும், ஏனென்றால் நீர் ஒருவரே எம்கடவுள். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்