
" அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்." (செப்பானியா 3:9)
நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள் என்றும், இறந்து உயிர்த்தெழுந்தபின் வானதூதர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் இயேசு கூறுகின்றார். நம்மில் அனேகர் மரணத்தைப் பற்றி அச்சமும் நடுக்கமும் கொண்டிருக்கின்றோம். இவ்வுலகில் நாம் இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நல்லவர்களாக வாழ்வோம் என்றால் மரணத்தைப் பற்றிய பயமே இருக்காது. நாம் இறந்தபின் விண்ணுலகிற்குச் சென்று வானதூதர்களைப் போல் இருப்போம்.
ஆண்டவரே, உம்மிடம் நாங்கள் திரும்பி வரவும், உம்மை விட்டு விலகாதிருக்கவும் எங்களுக்கு உதவி செய்தருளும், ஏனென்றால் நீர் ஒருவரே எம்கடவுள். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்