
"இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள்" (மத்தேயு 21:23)
இயேசுவின் போதனை ஆற்றலும், அதிகாரமும் வல்லமையும் நிறைந்ததாக இருந்ததால் தலைமைக் குருக்களும், மூப்பர்களும் இயேசுவிடம் வந்து 'நீர் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறீர்" என்று கேட்டார்கள். இயேசு அவர்களின் சூட்சுமமான மனநிலையைப் புரிந்துகொண்டு மிகவும் ஞானத்துடன் பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தார். நம்மிடம் பலரும் பலவிதமான கேள்விகளை அறிந்து கொள்ளவோ அல்லது குதர்க்கமாகவோ கேட்கலாம். அவர்களுக்கு ஞானத்துடன் பதிலளிக்க ஞானத்தின் ஊற்றாம் தூய ஆவியிடம் ஞானம் கேட்டுச் செபிப்போம்.
ஆண்டவரே, உம்மை எங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்கின்ற நம்பிக்கை என்னும் பெரும் கொடையை நீர் எங்களுக்குத் தந்துள்ளீர். அந்தக் கொடையை எம் உள்ளத்தில் புதுப்பித்தருளும். தளராத மனஉறுதியோடு உம்மைப் பின்பற்றவும், அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கவும் வரம் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்