
“பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்” (மத்தேயு 11:5)
மெசியாவுக்கு முன்னோடியாக வந்த திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு பெருமையாகப் பேசி சான்று பகர்கின்றார். காரணம் அவரின் உண்மை. நேர்மை, எளிமை, தியாகம் நிறைந்த வாழ்வும் வார்த்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. நம் வாழ்வும் வார்த்தையும் நம்முள் இருக்கும் இயேசுவை வெளிப்படுத்தக் கூடியதாகவும், நம் வாழ்வைக் கண்டு பிறரும் இயேசுவைப் பின்பற்றக் கூடியதாகவும் அமைய விழிப்பாயிருப்போமா...
எல்லாம் வல்ல இறைவா, உமது வல்லமையின் மேன்மையைக்காக உம்மைப் போற்றுகிறோம். வலிமையற்றவர்களாய் இருக்கிற நாங்களும் உமது வல்லமையை எங்கள் உள்ளத்தில் உணரவும், கடினமாக இருந்தாலும் உம்மைப் பின்பற்றவும் வரம் தாரும். உமது வழிகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையோடு அவற்றைப் பின்பற்றவும் அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்