advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 13, 2025 சனி

இறைவார்த்தை:

“எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே, மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்.” (மத்தேயு 17:12)

சிந்தனை

இயேசுவின் உருமாற்றத்தையும், அவருடன் மோசேயும் எலியாவும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்கள் இயேசுவிடம் எலியாவைப் பற்றிக் கேட்கிறார்கள். எலியாவுக்கு நிகழ்ந்ததுபோல் மானிடமகனையும் துன்புறுத்துவார்கள் என்று கூறினார். சீடர்களோ புரிந்துகொள்ளாதவர்களாய் இருந்தார்கள். நாமும் இயேசு நமக்காகத் துன்பங்களை அனுபவித்து நமக்கு மீட்புத் தந்த மறை பொருளை புரியாதவர்களாகவே இருக்கின்றோமே...

மன்றாட்டு

ஆண்டவரே, இயேசுவின் போதனைகளை அறிந்திருந்தும், அவற்றை எங்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்காதிருக்க நாங்கள் விதித்திருக்கின்ற தடைகளை அகற்றியருளும். உமது அன்பின் வழியில் எங்கள் வாழ்வை நடத்திட எமக்கு அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்