
“உன் கடவுளாகிய ஆண்டவர் நானே பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.” (எசாயா 48:17-18)
நல்லவர்கள் நல்லெண்ணம் கொண்டிருப்பதால், நல்லவற்றையே பேசுவர். தீயவரோ, தீமைகளையே சிந்திப்பதால் தீமைகளையே பேசுவர். நன்மை தீமைகளை ஆராய்ந்தறிந்து பிறரைத் தவறாக தீர்ப்பிடாமல், பேசுவதற்கு ஞானம் மிகமிகத் தேவை என்பதைப் புரிந்துகொள்ள ஞானத்தால் நிரப்பத் தூய ஆவியிடம் செபிப்போம்.
எல்லாம் வல்ல இறைவா, உமது பேரன்பால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். உமது அன்பின் இரக்கத்தால் என்னை நிறைத்தருளும். நான் மன்னிப்படைந்த புதுபிறப்பாவேன். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்