advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 11, 2025 வியாழன்

இறைவார்த்தை:

“திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்..” (மத்தேயு 11:12)

சிந்தனை

இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதர்களை அவர் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றோ, பெரியோர், சிறியோர் என்றோ பாகுபாடு பார்ப்பதில்லை. மாறாக இறைவனுக்கு ஏற்புடையவராகவும், அவரது விருப்பத்தை நிறைவு செய்பவராகவும் வாழ்ந்தால் அவரே விண்ணரசிற்கு உரியவராவார்.

மன்றாட்டு

எங்கள் ஆண்டவரே, இறைவா, எங்கள் சொற்களிலும், செயல்களிலும் வன்மையானவற்றை தவிர்த்திடவும், எங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பும் நற்பண்பும் நிலவிடவும் அருள்புரிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்