advent

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
டிசம்பர் 10, 2025 புதன்

இறைவார்த்தை:

“என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.” (மத்தேயு 11:29)

சிந்தனை

கடலிலே சிறிதும் பெரிதுமாக ஓயாது அலைகள் எழும்பிக் கொண்டே இருக்கும். ஆனால் அது கரையில் வந்து மறைந்துவிடும். அதுபோல் நம் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளும் வந்துகொண்டுதான் இருக்கும். அவை நிரந்தரமல்ல. அவைகளை சுமையாகக் கருதி சோர்ந்து போகாமல் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர் அனைத்தையும் எளிதாக்கி நமக்கு இளைப்பாற்றியும் விடுதலையும் தருவார்

மன்றாட்டு

எங்கள் ஆண்டவரே, இறைவா, எங்கள் மனதில் எழுகின்ற கலக்கங்களையும், உள்ளத்தை அழுத்துகின்ற பாரங்களையும் உமது திருவடியில் ஒப்படைக்கிறோம். எங்கள் கவலைகளை நீக்கி இளைப்பாறுதல் அளித்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்