advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 8, 2025 திங்கள்
புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் - பெருவிழா

இறைவார்த்தை:

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38)

சிந்தனை

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று உணர்ந்த அன்னை மரியா இறைத்திட்டத்திற்கு தன்னைக் கையளித்தார். கிரகிக்க முடியாத அச்சத்திற்குரிய மிகப் பெரிய மறைபொருளை 'ஆகட்டும்' என்று ஏற்றுக்கொள்கிறார். நம் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் கடவுளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே. எனவே என்ன நடந்தாலும் நன்மைக்கே என்று அவரது திட்டத்திற்குப் பணிந்து ஏற்றுக்கொள்வோம். வானதூதர் அருள்நிறைந்தவளே என்று ஒருமுறை சொல்லி மிகப்பெரிய காரியத்தை சாதித்தார். நாம் 53 முறை அருள் நிறைந்தவளே என்று சொல்லி அனேக காரியங்களைச் சாதிப்போமா...?

மன்றாட்டு

கன்னி மரியாவே, கருவிலே மாசற்றவராக உற்பவித்த நீர், இறைவனின் தாயாகும் பேறு பெற்றீர். ஆழமான நம்பிக்கையோடு இறைவனின் மீட்பு திட்டத்திற்கு சம்மதித்தீர். எங்கள் வாழ்வில் கடவுளின் விருப்பத்தை ஏற்று தாழ்ச்சியோடு சரணடைய எங்களுக்கு உதவி செய்தருளும். இறைதிட்டத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்வின் பயன் என்பதை உணர்ந்து, உறுதியோடும் தெளிவோடும் நம்பிக்கையின் பயணத்தில் நாங்கள் நடைபோட வரம் பெற்றுத் தாரும். ஆமென்.