advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 6, 2025

சனி

மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.
மத்தேயு 10:6-7

சிந்தனை

தாம்‌ பெற்ற செல்வம்‌ பெறுக இவ்வையகம்‌ என்றார்போல்‌ இயேசு தாம்‌ கொண்டிருந்த ஆற்றல்‌, வல்லமை, சக்தி அனைத்தாலும்‌ பாரபட்சமின்றி தேவையிலிருந்த எல்லா மக்களுக்கும்‌ குணமும்‌ நலமும்‌ நல்கி அற்புதங்களைச்‌ செய்தார்‌. அதேபோல்‌ தம்‌ சீடர்களும்‌ செய்ய வேண்டும்‌ என்று விரும்பித் தம்‌ அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்‌. அவர்களும்‌ நோயுற்றோரை குணப்படுத்தினர்‌. இறந்தோரையும்‌ அவர்‌ நாமத்தில்‌ உயிர்பெறச்‌ செய்தனர்‌. அவர்களின்‌ வாரிசுகளாகிய நமக்கும்‌ அந்த வல்லமையைக்‌ கொடுத்துள்ளார்‌ என உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்‌. செபித்து செயல்படுவோம்‌.

மன்றாட்டு

இறைவா, உம் மகன் இயேசுவின் சீடர்களாகிய நாங்களும் யாம் பெற்ற அருள்செல்வங்களை இல்லாதோருக்கு பகிந்தளிக்க தேவையான நல் மனதினைத் தாரும்.