
இறைவார்த்தை: பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார்.
மத்தேயு 9:29
நம்புவோருக்கு எல்லாம் நலமாகும். பார்வையற்ற இருவரும் இயேசு நமக்குப் பார்வை தருவார் என்ற நம்பிக்கையுடன் வந்தார்கள். இயேசுவோ அவர்களிடம் நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா என்று கேட்டு அவர்களின் நம்பிக்கையை உறுதி செய்தபின் பார்வை கொடுத்து அற்புதம் செய்தார். நம்மில் பலரும் ஆண்டவர் நமக்கு இதைச் செய்வாரா... முடியுமா... என்ற சந்தேகத்துடன் கேட்பதால் நம் விண்ணப்பங்கள் வருடங்கள், மாதங்கள், நாள்கள் ஆகியும் நிறைவேறுவதில்லை. எனவே இயேசுவால் முடியும்... செய்வார் என்ற நம்பிக்கையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்வோமா?....
இறைவா உம்மை நம்பியதால் பார்வை பெற்றவர்களைப் போல் நாங்களும் உம்மில் நம்பிக்கைக் கொண்டு வாழ அருள் புரியும்