
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
மத்தேயு 7:24
அறிவாளிகளின் சொல்லும் செயலும் ஞானமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அவன் ஆண்டவரின் வார்த்தையின்படி முன்மதியுடன் யோசித்து தன் வீட்டைப் பாறைமீது கட்டுவான். மழையோ பெருங்காற்றோ, வெள்ளமோ எதுவும் அதைச் சேதப்படுத்தாது. ஆனால் அறிவிலி முன்மதியின்றி தன் விருப்பம் போல் நினைத்து, மணல்மீது வீடு கட்டி பேரழிவுக்கு உள்ளாவான். நாம் அறிவாளியா? அறிவிலியா? அறிவாளியானால் உறுதியான பாறையாகிய இயேசுவின் வார்த்தைப்படி செயல்பட்டு அழியாத விண்ணக வீட்டைச் சுதந்தரித்துக் கொள்வோம்.
இறைவா! உம் ஞானத்தை நான் பெற்றுக் கொண்டு அதனை மற்றவர்களுக்கு வழங்கும் நல்மனதினைத் அருளைத்தாரும்.