
எனவே, நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
மத்தேயு 16:18
'விண்ணரசின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன்' என்று இயேசு பேதுருவுக்கு வாக்களிக்கிறார். காரணம் அவருடன் இருந்த பன்னிருவரில் பேதுரு இயேசுவை இனம் கண்டுகொண்டு “நீர் மெசியா' என்று அறிக்கையிடுகிறார். அதனால், பாராட்டையும், விண்ணகத்தின் திறவுகோலையம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். நமக்கு இயேசு யாராக இருக்கிறார் என்று ஆய்ந்து அறிந்து தேர்ந்து தெளிந்து அறிக்கையிடுவோம். புனித பிரான்சிஸ் சவேரியாரைப் - போல் அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். பேறுபெற்றவர்கள் வாழும் விண்ணகத்தையே உரிமையாக்கிக் கொள்வோம்.
இறைவா அன்று இயேசு பசியுற்ற மக்களுக்கு உதவியது போல நாங்களும் அவரின் நன்மைதனத்தை இன்று மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள நல்ல இதயம் தாரும்.