advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 2, 2025

செவ்வாய்

பின்பு, அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.
லூக்கா:10:23

சிந்தனை

தந்தை என்னை மீட்பராக உலகிற்கு அனுப்புவேன்‌ என்று வாக்களித்தபடியே என்னைக்‌ காண எதிர்பார்த்திருந்த இறைவாக்கினர்கள்‌, அறிஞர்கள்‌, - அரசர்களால்‌ காணமுடியாமற்‌ போயிற்று. ஆனால்‌ - குழந்தைகள்‌ போன்று கபடற்ற என்‌ சீடர்களாகிய நீங்கள்‌ என்னைக்‌ காண வாய்ப்பு பெற்றுள்ளீர்கள்‌.' - எனவே சீடர்களைப்‌ பேறுபெற்றவர்கள்‌ என்று - பாராட்டுகிறார்‌. இன்றும்‌ இயேசு நற்கருணையில் இறைவார்த்தையில்‌, பிறர்‌ வடிவில்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ கொண்டே இருக்கிறார்‌. நம்‌ முன்னோர்கள்‌ போல்‌ நம்மால்‌ கண்டுகொள்ள முடியவில்லையே. ஏன்‌...ஏன்‌...?

மன்றாட்டு

இறைவா! நற்கருணையில் உம் மகன் இயேசுவை கண்டுணர்ந்து, எம்மீட்பராக ஏற்று இவ்வுலகில் அவரது சீடராய் வாழ்ந்திட அருள் புரியும்.