advent

திருவருகைக் காலம் முதல் வாரம்
டிசம்பர் 1, 2025

திங்கள்கிழமை

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.”
மத்தேயு 8:8

சிந்தனை

நூற்றுவர்‌ தலைவன்‌ தன்‌ அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி தன்‌ மகனைக்‌ குணப்படுத்த, இயேசுவை தன்‌ வீட்டிற்கு வரும்படி அழைக்கவில்லை. இயேசுவின்‌ வல்லமையை உணர்ந்த அவர்‌ நம்பிக்கையும்‌ பணிவும்‌ தாழ்மையும்‌ நிறைந்தவராய்‌ இயேசுவிடம்‌ 'ஒரு வார்த்தை சொன்னால்‌ போதும்‌, என்‌ மகன்‌ குணமடைவான்‌' என்றார்‌. இயேசுவும்‌ அவரது தாழ்மையை, நம்பிக்கையைப்‌ பாராட்டி வீட்டிற்கு செல்லாமலே தன்‌ வார்த்தையை அனுப்பி குணமளிக்கிறார்‌. ஒவ்வொரு நாளும்‌ திருப்பலியில்‌ நற்கருணை வடிவில்‌ வரும்‌ இயேசுவை தகுதியுடன்‌ வரவேற்கிறோமா?.

மன்றாட்டு

இறைவா! உம் இல்லத்தில் நிலையாய் இருக்க, உம் வார்த்தையின்படி நடக்க அருள் புரியும்.