என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

ஒளி

கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று.
கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

தொடக்கநூல் 1:3-4

நல்ல கொடைகள் அனைத்தும்,
நிறைவான வரமெல்லாம்,
ஒளியின் பிறப்பிடமான
விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.
அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை;
அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.

யாக்கோபு 1:17

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்
அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும்
உமது உறைவிடத்திற்கும்
கொண்டுபோய்ச் சேர்க்கும்.

திருப்பாடல் 43:3

உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது
அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.

திருப்பாடல் 119:130

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!
என் பாதைக்கு ஒளியும் அதுவே!

திருப்பாடல் 119:105

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து
உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே;
கடவுள் ஒளியாய் இருக்கிறார்;
அவரிடம் இருள் என்பதே இல்லை.

1யோவான் 1:5

உலகின் ஒளி நானே
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார.

யோவான் 8:12

யாக்கோபின் குடும்பத்தாரே
வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

எசாயா 2:5

'இருளிலிருந்து ஒளி தோன்றுக!'
என்று சொன்ன கடவுளே
எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.
அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

2கொரிந்தியர் 4:6

ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள்.
ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

எபேசியர் 5:8

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்:
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.

திருப்பாடல் 112:4

ஆண்டவரே என் ஒளி;
அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

திருப்பாடல் 27:1

ஒளி மகிழ்ச்சியூட்டும்:
கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.

ச.உ11:7

anbinmadal.org