என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

மனநிறைவு

என் வார்த்தைகளுக்குச் செவிகொடு,
நான் சொல்வதைக் கவனி.
அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு
அவை உயிரளிக்கும்,
அவர்களுக்கு உடல் நலமும் தரும்.

நீதிமொழிகள் 4:20,22

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்,
உன் உள்ளத்து விருப்பங்களை
அவர் நிறைவேற்றுவார்.

திருப்பாடல்கள் 37:4

எவ்வளவு பார்த்தாலும்
கண்ணின் ஆவல் தீர்வதில்லை,
எவ்வளவு கேட்டாலும்
காதின் வேட்கை தணிவதில்லை.

சபை உரையாளர் 1:8

எனவே, உணவும் உடையும்
நமக்கு இருந்தால் அவற்றில்
நாம் மனநிறைவு கொள்வோம்.

1திமொத்தேயு 6:8

ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை
மாற்றிக் கொள்கின்றாய்?
இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்,
ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.

எரேமியா2:36, 1திமொத்தேயு 6:6

"எவ்வகைப் பேராசைக்கும்
இடங்கொடாதவாறு
எச்சரிக்கையாயிருங்கள்.
மிகுதியான உடைமைகளைக்
கொண்டிருப்பதால் ஒருவருக்கு
வாழ்வு வந்துவிடாது"

லூக்கா 12:15

எந்நிலையிலும் மனநிறைவோடு
இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.
எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்,
வளமையிலும் வாழத் தெரியும்.
வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ,
நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும்
வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

பிலிப்பியர் 4:11,12

பொருளாசையை விலக்கி வாழுங்கள்.
உள்ளதே போதும் என்றிருங்கள்.
ஏனெனில், "நான் ஒருபோதும்
உன்னைக் கைவிடமாட்டேன்!
உன்னை விட்டு விலகமாட்டேன்"

எரேமியா 13:5

தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்,
நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை
வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே
எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும்
கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும்.

திருப்பாடல்கள் 107:9, 1திமொத்தேயு 6:17

காலைதோறும்
உமது பேரன்பால்
எங்களுக்கு நிறைவளியும்,
அப்பொழுது வாழ்நாளெல்லாம்
நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

திருப்பாடல்கள் 90:14

உலகத்திற்கு நாம் எதையும்
கொண்டு வந்ததில்லை.
உலகத்தை விட்டு எதையும் கொண்டு
போகவும் முடியாது.

1திமொத்தேயு 6:7

ஆகவே அனைத்திற்கும் மேலாக
அவரது ஆட்சியையும் அவருக்கு
ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்போது இவையனைத்தும்
உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

மத்தேயு6:33

பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு
பணம் இருந்தாலும் ஆவல் தீராது,
செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர்
அதனால் பயனடையாமற்போகிறார்.
இதுவும் வீணே.

சபை உரையாளர் 5:10

காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற
பயனற்ற உழைப்பு.
இரு கை நிறைய இருப்பதைவிட
மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.

சபை உரையாளர் 4:6

anbinmadal.org