என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

ஆறுதல்

என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்.
அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்.

திருப்பாடல் 142:2

நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து> நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

2தெசலோனிக்கர் 2:16-17

என் நெஞ்சே!
நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?

திருப்பாடல் 42:5

உங்களுக்கு
ஆறுதல் வழங்குபவர்
நானே தான்!

எசாயா51:12

உனக்கு
நான்
முடிவில்லாத அன்பு
காட்டியுள்ளேன்

எரேமியா 31:3

என் தலைவராகிய ஆண்டவரே!
என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்.

திருப்பாடல்141:8

உலகின் ஒளி நானே!
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்;
வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.

யோவான் 8:12

யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

எசாயா 2:5

'இருளிலிருந்து ஒளி தோன்றுக!'
என்று சொன்ன கடவுளே
எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.
அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

2கொரிந்தியர் 4:6

ஒரு காலத்தில் இருளாய் இருந்த
நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள்.
ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

எபேசியர் 5:8

இருளில் ஒளியென
அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்:
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.

திருப்பாடல் 112:4

ஆண்டவரே என் ஒளி
அவரே என் மீட்பு
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

திருப்பாடல் 27:1

ஒளி மகிழ்ச்சியூட்டும்:
கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.


ச.உ11:7

anbinmadal.org