என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

வருகை

நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின்
திரும்பிவந்து உங்களை
என்னிடம் அழைத்துக்கொள்வேன்.

யோவான் 14:3

எனவே,நாம் இரக்கத்தைப் பெறவும்,
ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்,
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயர்4:16

கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி
வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது.

யோவன் 6:33

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்.
இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.

யோவான் 14:28

இதோ!
அவர் மேகங்கள் சூழ வருகின்றார்.

திருவெளிப்பாடு 1:7

நான் உங்களிடம் சொல்வது உண்மையே.
நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள்.
நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.
நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

யோவான் 16:7

யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்
என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.

யோவான் 7:37

ஆண்டவராகிய இயேசுவே,
வாரும்.

திருவெளிப்பாடு 22:20

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே
எல்லாரும் என்னிடம் வாருங்கள்
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

மத்தேயு11:28

இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.
அவர் நீதியுள்ளவர்
வெற்றிவேந்தர்
எளிமையுள்ளவர்.

செக்கரியா 9:9

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி
நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.

யோவான் 12:46

நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு
அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

யோவான் 10:10

.என்னிடம் வருபவரை
நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.

யோவான் 6:37

மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது
வரவிருக்கிறவர் வந்து விடுவார்
காலம் தாழ்த்தமாட்டார்.

எபிரேயர்10.37

தூய ஆவி உங்களிடம் வரும்போது
நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று
எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும்
உலகின் கடையெல்லைவரைக்கும்
எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார்.

திருபணி1:8

ஆம்
விரைவாகவே வருகிறேன்

திருவெளிப்பாடு 22:20

மகிழ்ச்சிநிறை பாடலுடன்
அவர் திருமுன் வாருங்கள்!

திருப்பாடல்100:12

ஆம் ஆண்டவரே
நீரே மெசியா!
நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

யோவான் 11:27

உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும்
ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய
இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.
அதன் பின்பு முடிவு வரும்.

மத்தேயு24:14

உண்மையை வெளிப்படுத்தும்
தூய ஆவியார் வரும்போது
அவர் முழு உண்மையை நோக்கி
உங்களை வழிநடத்துவார்.

யோவான் 16:13

anbinmadal.org